மேலும் செய்திகள்
இடி மின்னலுடன் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
18-Sep-2025
சிவகங்கை : சிவகங்கை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்ததால், கடும் வெப்பத்தில் தகித்த மக்களை குளிர்வித்து சென்றுள்ளது. கடந்த சில நாட்களாக கோடை காலம் போன்றே கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெப்பம் தகித்தது. இந்நிலையில் நேற்று மாலை 3:00 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடின. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
18-Sep-2025