மேலும் செய்திகள்
கீழப்பசலை தடுப்பணையில் குளியல் போட்ட சிறுவர்கள்
27-Oct-2024
மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் மீன்களை பிடிக்க தேவையான மீன்பிடி வலைகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் வைகை ஆற்றில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மேலும் மானாமதுரை இளையான்குடி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளிலும் தண்ணீர் தேங்கி வருவதை தொடர்ந்து இதில் உள்ள மீன்களை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு வலைகளை வைத்து பிடித்து வருகின்றனர்.மதுரையைச் சேர்ந்த மீன் வலை விற்பனை செய்யும் வியாபாரி கணேசன் 48, கூறியதாவது: கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் நல்ல மழை பெய்ததை தொடர்ந்து வைகை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் ஓடி வருகிற நிலையில் ஏராளமான மீன்களும் வருகின்றன.இவற்றை பிடிப்பதற்காக ஏராளமானோர் எங்களிடம் வலைகளை வாங்கி வருகின்றனர்.ஒரு வலை தரத்திற்கேற்ப ரூ.200 லிருந்து ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது என்றார்.
27-Oct-2024