மேலும் செய்திகள்
பட்டமளிப்பு விழா
24-Feb-2026
காரைக்குடி: அமராவதிபுதுார் ராஜராஜன் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பட்டமளிப்பு, பரிசளிப்பு, ஆண்டு விழா நடந்தது. அழகப்பா பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுப்பையா தலைமை வகித்தார். பல்கலை துணைவேந்தர் ரவி, நல்லாசிரியர் தங்கம்மூர்த்தி, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் பேராசிரியர் ராஜிவ், பேராசிரியர் அய்யாவு பங்கேற்றனர். -பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தமாணவர், ஆசிரியருக்கு தங்க நாணயம் வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் வடிவாம்பாள் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஜாய்சி பிருந்தா நன்றி கூறினார்.
24-Feb-2026