உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீட்டில் வெள்ளி சாமான்கள் திருட்டு

வீட்டில் வெள்ளி சாமான்கள் திருட்டு

சிவகங்கை: ஒக்கூரில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி சாமான்களை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை அருகே ஒக்கூர் பிள்ளையார்கோவில் தெரு தங்கமணி 62. இவர் மதுரையில் நகை அடகு கடை வைத்துள்ளார்.மதுரையில் தங்கியுள்ள இவர், ஒரு வாரத்திற்கு முன் ஒக்கூர் வந்திருந்தார். நேற்று காலை 10:45 மணிக்கு ஒக்கூரில் உள்ள வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது வீட்டு பூட்டை உடைத்து, அங்கிருந்த வெள்ளி சாமான்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. மதகுபட்டி போலீசார் எவ்வளவு வெள்ளி சாமான்கள் திருடு போனது என்பது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை