மேலும் செய்திகள்
காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
19-Jun-2025
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் அருகே தி.வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மூலகால பைரவருக்கு வழிபாடு நடந்தது.இக்கோயிலில் பைரவர் தனி சன்னதியில் எழுந்தருளி ஸ்ரீமூலபால கால பைரவர் என்றழைக்கப்படுகிறார். தேய்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.நேற்று மாலை மூலவர் மூலபாலகால பைரவர் தங்க கவசத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கின. தொடர்ந்து சிவாச்சாரியார்களால் மகா பைரவயாகம், கோ பூஜை நடந்தது.சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மகாபூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.பின்னர் யாகசாலையிலிருந்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் நிறைந்த கலசங்களுக்கு அடுக்கு தீபம், பஞ்சமுக தீபம், கும்ப தீபம், நாக தீபம், ஒற்றை தீபம், கற்பூர தீபம் ஆகிய தீபாராதனை நடந்தன. தொடர்ந்து மூலவருக்கு அபிேஷக, ஆராதனை நடந்தது. பெண்கள் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பைரவரை வழிபட்டனர்.
19-Jun-2025