உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலை, சாக்கடை கால்வாய் இல்லை அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி

சாலை, சாக்கடை கால்வாய் இல்லை அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி

காரைக்குடி: காரைக்குடி செஞ்சை அருகே சாலை, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். காரைக்குடி மாநகராட்சியில் 36 வார்டுகளிலும் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். காரைக்குடி நகரின் பழமையான பகுதியாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகவும் செஞ்சை உள்ளது.31வது வார்டுக்குட்பட்ட கீழ ஊரணி தெற்கு முனிசிபல் 1 மற்றும் 2 தெருக்களில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, சாக்கடை கால்வாய் இல்லை. சாலையும் இல்லை. நடைபாதையின் நடுவில் மின்கம்பம் உள்ளதால் மக்கள் சிரமம் அடைகின்றனர். வள்ளி கூறுகையில்: ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர் கால்வாய் உடைந்து கிடக்கிறது.மழைகாலங்களில் கழிவுநீர் வீடுகளுக்குள் செல்கிறது. இதனால் சிரமம் ஏற்படுகிறது.கொசுக்கள் உற்பத்தியாவதால் பல்வேறு நோய்களும் உண்டாகிறது. சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்ற பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. விஜயா கூறுகையில்: மழைக்காலங்களில் சாக்கடை வீட்டிற்குள் புகுந்து துர்நாற்றம் அடிக்கிறது. அனைத்து சாக்கடை கால்வாயும் உடைந்து விட்டது. கவுன்சிலரிடம் பலமுறை புகார் தெரிவித்தோம். அவர் மாநகராட்சியில் தெரிவித்ததாக சொல்கிறார்.ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. குழந்தைகளுக்கு பல்வேறு நோய் ஏற்படுகிறது. சாக்கடையை அள்ளுபவர்கள் அதனை அப்புறப்படுத்துவதில்லை. அப்படியே விட்டு விடுகின்றனர். சாலை வசதியே இல்லை. மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை