மேலும் செய்திகள்
பயன்பாடு இன்றி சேதம் அடைந்த சமுதாயக்கூடம்
25-Nov-2024
எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே பேரிடர் காலங்களில் அடைக்கலம் புக அரசு கட்டடங்கள் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.இவ்வொன்றியத்தில் மேலவண்ணாரிருப்பு ஊராட்சிக்குட்பட்ட கீழவண்ணாரிருப்பு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமம் மலையடிவாரத்தில் மலைத்தொடர்கள் மற்றும் பெரியகண்மாய்க்கு மத்தியில் அமைந்துள்ள நிலையில் பேரிடர் காலங்களில் இக்கிராம மக்களை பாதுகாத்து தங்கவைக்க அங்கு அரசு கட்டடம் ஏதுமில்லை. இங்கு அரசின் சமுதாயக்கூடம் கட்டித்தர பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் இதுநாள் வரை அங்கன்வாடி கட்டடம் கூட வரவில்லை.பித்தரைச்செல்வம், சமூக ஆர்வலர், மேலவண்ணாரிருப்பு: கீழவண்ணாரிருப்பு கிராமத்தில் அனைவரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இக்கிராமத்திற்கு செல்லும் மலைப்பாதை வனத்துறை அனுமதி கிடைக்காததால் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் பெருமழை, பேரிடர் காலங்களில் கீழவண்ணாரிருப்பு கிராம மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதில் தாமதம் ஏற்படும்.அங்கேயே தனியாக சமுதாயக்கூடம் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும். எனவே உடனடியாக இக்கிராம மக்கள் வீட்டு நிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகவும் இயற்கை பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக தங்கிக் கொள்ளவும் சமுதாயக்கூடத்தை அங்கு உயரமான பகுதியில் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
25-Nov-2024