மேலும் செய்திகள்
திருப்புத்துாரில் தைப்பூச விழா துவக்கம்
07-Jan-2025
சிறப்பு அபிேஷகம்
29-Dec-2024
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு நாளை திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சுப்பிரமணியருக்கு பழநி யாத்திரை செல்லும் பக்தர்களால் தைப்பூச விழா நடத்தப்படுகிறது. சஷ்டி, கார்த்திகை முருகனுக்கு அபிேஷகம் நடந்து வருகிறது. இன்று மாலை 6:00 மணிக்கு சஷ்டியை முன்னிட்டு அபிேஷகம் நடக்கிறது. நாளை மாலை திருவிளக்கு பூஜை நடைபெறும். ஜன.26ல் காலை 10:00 மணிக்கு சுவாமிக்கும்,வெள்ளிவேலுக்கும் அபிேஷகம் நடைபெறும். ஜன.29ல் மாலை 108 சங்காபிேஷகம், பிப். 3ல் சுவாமி திருவீதி உலா நடைபெறும். தொடர்ந்து பிப். 5ல் பக்தர்கள் பழநிபாதயாத்திரை புறப்படுகின்றனர். மூலவருக்கு பஞ்சாமிர்த சிறப்பு அபிேஷகமும், பிப்.11ல் தைப்பூச சிறப்பு அபிேஷகமும் நடைபெறும்.
07-Jan-2025
29-Dec-2024