உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் சர்ச் விழா; கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்புத்துார் சர்ச் விழா; கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்புத்துார்; திருப்புத்துார் ஆர்.சி.பாத்திமா நடுநிலைப்பள்ளி வளாகத்திலுள்ள அமல அன்னை சர்ச்சில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இந்த சர்ச்சில் ஆண்டுதோறும் டிசம்பரில் அமல அன்னை திருவிழா நடைபெறும். நேற்று விழா துவக்கத்தை முன்னிட்டு மாலையில் கொடிப்பவனி நடந்தது.தொடர்ந்து பாதிரியர் அற்புதராசு முன்னிலையில், ராமநாதபுர பாதிரியார் சிங்கராயர் கொடியேற்றி, திருப்பலி நடத்தி விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து தினசரி மாலை 5:30 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெறும்.ஞாயிற்றுக்கிழமையான டிச.1ல் காலை 8:00 மணிக்கு திருப்பலி நடைபெறும். டிச.7 மாலையில் திருவிழாத் திருப்பலியும், தேர்ப்பவனியும் நடைபெறும். டிச.8 ல் காலை 8:00 மணிக்கு பெருவிழா திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ