மேலும் செய்திகள்
காரைக்குடியில் விவசாயி வெட்டிக்கொலை
24-Jan-2025
காரைக்குடி : காரைக்குடியில் விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சொத்துக்காக உடன் பிறந்த தம்பிகளே வெட்டி கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் 3வது வீதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் மகன் முத்துப்பாண்டி 54. விவசாயியான இவர் காரைக்குடி அதலைகண்மாய் வயலில் விவசாயம் செய்து வந்தார். காங்., கட்சியைச் சேர்ந்தவர்.ஜன. 24 ஆம் தேதி காரைக்குடி அதலைக்கண்மாய் வயல் அருகே கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். போலீஸ் விசாரணையில், பூர்வீக சொத்து சம்பந்தமாக குடும்பத்திற்குள் பிரச்னை நிலவி வந்துள்ளது. சொத்துக்காக முத்துப்பாண்டியன் உடன் பிறந்த சகோதரர்களான பாண்டித்துரை, பிரகதீஷ் பாண்டியன், சரவண பாண்டியன் மற்றும் அக்காவின் கணவர் நாகநாதன் ஆகியோர் தனது அண்ணனை கொலை செய்ததாக முத்துப்பாண்டியின் சகோதரி கோடீஸ்வரி புகார் அளித்தார். பாண்டித்துரை தவிர மற்ற மூவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24-Jan-2025