மேலும் செய்திகள்
பள்ளி ஆண்டு விழாக்கள்
22-Mar-2025
திருப்புத்துார்: திருப்புத்துார் ஊ.ஓ. மா.ஆலம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.புதிய புரவலர்கள் இணைப்பு, மாணவர் சேர்க்கை, பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் குமார் தலைமை வகித்தார். ராஜா, முன்னாள் ஊராட்சி தலைவர் திலகவதி பாண்டியன் முன்னிலை வகித்தனர். டி.இ.ஓ., செந்தில் குமரன் பங்கேற்றார்.தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் ராவ் வரவேற்றார். ஆண்டறிக்கையை ஆசிரியை முத்துலட்சுமி வாசித்தார்.மாணவர்களுக்கு மரக்கன்று, சீருடை, பரிசு பொருட்களை காமாட்சி நாகராஜன் வழங்கினார்.
22-Mar-2025