உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சாய்ந்த நிலையில் மின்கம்பம்

 சாய்ந்த நிலையில் மின்கம்பம்

சிவகங்கை:சருகனி அருகே உள்ள நாகாடி கிராமத்தில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரி செய்ய மாவட்ட மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்டம் சருகனி அருகே உள்ளது நாகாடி கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி அருகே உயரழுத்த மின்கம்பம் செல்கிறது. இதில் ஒன்று நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தை சரிசெய்ய பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் பிரச்னை இல்லை. பள்ளி வேலை நாட்களில் பலத்த காற்று வீசி மின்கம்பம் சாய்ந்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட மின்வாரிய நிர்வாகம் நாகாடி கிராமத்தில் துவக்கப்பள்ளி அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை