சிவகங்கையில் இன்று சூரசம்ஹாரம் நேற்று வேல் வாங்கும் பூஜை
சிவகங்கை: சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணியர் கந்த சஷ்டிவிழாவை முன்னிட்டு இன்று நடக்கும் சூரசம்ஹாரத்திற்காக, நேற்று மாலை அம்பாளிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் அக்., 22ல் காப்பு கட்டுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. தினமும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. இன்று மாலை 4:30 முதல் 6:00 மணிக்குள் கோயில் முன் சூரனை, முருகன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று விசாலாட்சி அம்பாளிடம் இருந்து வேல் வாங்கி முருகனிடம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. வேல் வாங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.