மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி விலை குறைந்தது
மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் இந்த வாரம் சின்ன பாகற்காய் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.200 க்கும்,தக்காளி கிலோ ரூ.35க்கும் விற்கப்பட்டது.மானாமதுரை வாச்சந்தைக்கு மதுரை, திருப்புவனம்,திருப்பாச்சேத்தி, இளையான்குடி, சிவகங்கை,பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து வியாபாரிகள் வந்து காய்கறி, மளிகை, பிளாஸ்டிக், விவசாய இடுபொருட்கள், மீன்கள், கருவாடு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர்.நேற்று நடந்த சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ. 35, சின்ன வெங்காயம் ரூ. 70 , பெரிய வெங்காயம் ரூ.75, கத்தரிக்காய் ரூ.100, கேரட், முள்ளங்கி,சவ்சவ் ரூ.80, பச்சை மிளகாய் ரூ.60, பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ் ரூ.200க்கு விற்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக ரூ.300லிருந்து ரூ.400க்கு விற்பனையான சின்னபாகற்காய் ரூ.200க்கும், உருளைக்கிழங்கு ரூ.70 என விற்பனையானது.இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: கடந்த இரண்டு மூன்று வாரங்களாக காய்கறிகளின் விலை சற்று கூடுதலாகி விற்பனையான நிலையில் இந்த வாரம் காய்கறிகளின் வரத்து அதிகரித்ததால் விலை சற்று குறைந்து விற்பனையானது என்றனர்.