மேலும் செய்திகள்
மகளிர் இலவச பஸ்கள் மீண்டும் இயக்கம்
01-Jan-2025
திருப்புவனம், : திருப்புவனத்தில் உரிய நேரத்தில் டவுன் பஸ்கள் இயக்கப்படாததால் பணிக்கு செல்வோர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்டத்தின் கிளை பணிமனை திருப்புவனத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து திருப்புவனத்தைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தினசரி டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களை நம்பியே கிராமப்புற மக்கள் மதுரை நகருக்கு சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக டவுன் பஸ்கள் உரிய நேரத்திற்கு வருவதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கிராமங்களுக்கு உரிய நேரத்தில் வராததால் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு தாமதமாக செல்ல வேண்டியுள்ளது. போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.திருப்புவனத்தில் இருந்து மதுரைக்கு ஆரம்பத்தில் ஒரு சில வேன்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 20க்கும் மேற்பட்ட வேன்கள் தொடர்ச்சியாக காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படுகின்றன. டவுன் பஸ்கள் உரிய நேரத்தில் இயக்கப்படாததால் பொதுமக்கள் பலரும் வேன்கள், ஷேர் ஆட்டோக்களை நம்பியே பயணம் செய்ய வேண்டியுள்ளது. திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் பலமுறை உறுப்பினர்கள் கிராமங்களுக்கு உரிய நேரத்தில் டவுன் பஸ்கள் வருவதில்லை என குற்றம்சாட்டி இருந்தனர். எனவே அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் திருப்புவனத்தில் உரிய நேரத்தில் டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
01-Jan-2025