உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தி.மு.க., நிர்வாகி மீது தாக்குதல் பேரூராட்சி செயலர் அலுவலர் கைது

தி.மு.க., நிர்வாகி மீது தாக்குதல் பேரூராட்சி செயலர் அலுவலர் கைது

திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு வந்த பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி தி.மு.க., நகர துணை செயலாளரை பேனா ஸ்டாண்டால் தாக்கியதில் ரத்தம் கொட்டியது. இதையடுத்து செயல்அலுவலர் கைது செய்யப்பட்டார்.திருப்புத்துார் பேரூராட்சி செயல் அலுவலராக இருந்தவர் தனுஷ்கோடி. இவர் மாறுதலாகி சென்று கடலுார் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் பணியாற்றி வருகிறார். திருப்புத்துாரில் பணியாற்றிய போது தனுஷ்கோடி மீது பேரூராட்சி தலைவரின் கணவர் நாராயணன்,' தன்னிடம் தனுஷ்கோடி வாங்கிய ரூ. 3 லட்சத்தை திருப்பித் தரக்கோரி' புகார் அளித்திருந்தார். அந்த வழக்கு சம்பந்தமாக நேற்று திருப்புத்துார் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடந்தது. இன்ஸ்பெக்டர் பிரணவின் டேனி இரு தரப்பையும் விசாரித்தார். அப்போது வெளியே அமர்ந்திருந்த தனுஷ்கோடியுடன் வந்தவர்கள் சப்தமிட இன்ஸ்பெக்டர் வெளியே சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினார். இதனிடையே இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது மேஜையில் இருந்த பேனா ஸ்டாண்டை எடுத்த தனுஷ்கோடி, நாராயணனுடன் வந்திருந்த பேரூராட்சி கவுன்சிலர் கணவரும், தி.மு.க., நகர துணை செயலாளரான உதயம் சண்முகத்தை தாக்கினார். அதில் அவரது நெற்றியில் காயமடைந்து ரத்தம் கொட்டியது. அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனுஷ்கோடியை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை