மேலும் செய்திகள்
கண்காணிப்பு கேமரா துவக்க விழா
30-Apr-2025
தேவகோட்டை : தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் ரூ 11 கோடி செலவில் பழைய இடத்திலேயே புதிதாக கட்டப்பட உள்ளது. 30 நாளில் கடைகளை காலி செய்ய நகராட்சியில் இருந்து அங்குள்ள வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.பேருந்து நிலைய குத்தகை கடை வியாபாரிகள் சங்க தலைவர் பெரியகருப்பன் தலைமையில் கூடுதல் அவகாசம் கேட்டு நகராட்சி தலைவர் சுந்தரலிங்கத்திடம் மனு கொடுத்தனர். மனுவில் கொரானோ நஷ்டத்தில் இருந்து தற்போது மீண்டு வருவதாகவும், எனவே கொரோனா காலத்திற்கு ஆறு மாத வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும், கடந்த ஆண்டு செப்டம்பரில் கோரிக்கை வைத்தபடி கடைகளை காலி செய்ய ஒரு வருட காலம் அவகாசம் தரவேண்டும், கடைகள் நடத்துவோருக்கு அதே இடத்தில் கடைகள் தர வேண்டும், தற்காலிகமாக அமைக்கும் பஸ் ஸ்டாண்டில் அனைத்து கடைக்காரர்களுக்கும் தற்காலிக கடை அமைத்து தர வேண்டும் குறிப்பிட்டிருந்தனர்.வர்த்தக சங்க தலைவர் மகபூப்பாட்சா, குத்தகை சங்க செயலாளர்கள் வெங்கடசுப்பு, தங்கவேலு, விஜயன், உட்பட வியாபாரிகள் சென்றனர்.
30-Apr-2025