உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்மாற்றி பணி துவக்கம்

மின்மாற்றி பணி துவக்கம்

திருப்புத்துார்: திருப்புத்துாரில் புதிய மின்மாற்றிகளை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.திருப்புத்துார் வசந்தம் நகர் பகுதியில் மின் இணைப்புக்கள் அதிகரித்ததை அடுத்து குறைந்த மின்அழுத்தம் நிலவியது. இதனால் பொதுமக்கள் கூடுதல் மின்மாற்றி அமைக்க கோரினர். மின்துறையினர் பழைய மின்மாற்றியில் இருந்து மின் இணைப்புக்களை பிரித்து புதிதாக 2 மின்மாற்றிகள் அமைத்துள்ளனர்.இந்த மின்மாற்றிகளை துவக்கி வைத்த அமைச்சர் பெரியகருப்பன் புதிய மின்மாற்றிகளால் இப்பகுதியில் சீரான மின் அழுத்தத்தில் மின் விநியோகமாகும்' என்றார். இதே போன்று கல்லல் ஒன்றியம் கே.ஆத்தங்குடி, சிராவயல் மேட்டுப்பட்டியிலும் புதிய மின்மாற்றிகளை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ