மேலும் செய்திகள்
மாணவர்கள் மறியலால் -பஸ் சேவை நிறுத்தம்
20-Sep-2025
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள பள்ளி, கல்லுாரிக்கு மாணவர்கள் வந்து செல்ல போதிய டவுன் பஸ்கள் இல்லாததால், கிடைத்த பஸ்சில் படியில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாக்கோட்டை, புதுவயல், மானாகிரி, பள்ளத்துார், அமராவதிபுதுார், கல்லல் போன்ற பகுதி மாணவர்கள், பொதுமக்கள் காரைக்குடிக்கு அதிகம் வந்து செல்கின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்களுக்கு கிராமப்புறங்களில் இருந்து போதிய டவுன் பஸ் வசதி இல்லை. இதனால் பஸ்களில் படியில் தொங்கிக்கொண்டே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் பள்ளி, கல்லுாரிக்கு செல்ல காலை, மாலை நேரங்களில் போதிய பஸ்களை கிராமங்களுக்கு இயக்க வேண்டும்.
20-Sep-2025