உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருச்சி -- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் தேவகோட்டையில் மின்விளக்கு வசதியில்லை

திருச்சி -- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் தேவகோட்டையில் மின்விளக்கு வசதியில்லை

தேவகோட்டை ; தேவகோட்டை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்ட ைஹமாஸ் விளக்குகளுக்கு மின் இணைப்பு பெறாமல் இருப்பதால், இரவில் வெளிச்சமின்றி இருளில் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேவகோட்டை அருகே சடையன்காடு முதல் கிளியூர், மாவிடுதிக்கோட்டை, முள்ளிக்குண்டு விலக்கு, சடையன்காடு, கண்ணங்கோட்டை, மார்க்கண்டேயன்பட்டி, இருமதி, புளியால், கிளியூர், பருத்தியூர் போன்ற கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு ரோடுகள் பைபாஸ் ரோட்டில் ஏற்படுத்தியுள்ளனர். இந்த விலக்கு ரோட்டில் சிறிதாக தடுப்பு சுவர் அமைத்துள்ளனர்.ஆனால், அதைவெளிப்படுத்த, இரவில் மின்விளக்கு வசதி செய்யவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் தடுப்பு சுவர் தெரியாமல், விபத்திற்குள்ளாகின்றனர்.கிராமங்களில் இருந்து பைபாஸ் ரோட்டிற்கு வரும் வாகனங்களும் விபத்தில் சிக்குகின்றன. திருச்சி -- ராமேஸ்வரம் செல்லும் 4 வழிச்சாலையில் கிராம சந்திப்பு ரோடுகளில் போதிய சிக்னல் போர்டு மற்றும் பொருத்தப்பட்ட ைஹமாஸ் விளக்குகளுக்கு இதுவரை மின் இணைப்பு கொடுக்கவில்லை.இதனால், இரவில் ைஹமாஸ் விளக்குகள் எரியாமல், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.இது குறித்து ஆனந்த் கூறியதாவது: நான்கு வழிச்சாலை சந்திப்புகளில் ைஹமாஸ் விளக்கு பொருத்தி, அவை காட்சி பொருளாக உள்ளது.இது குறித்து பல துறைகளில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதற்காக மின்கம்பம் நடவேண்டும் என்பதால், காலதாமதம் ஆவதாக தெரிவிக்கின்றனர். நான்கு வழிச்சாலையில் கிராமங்கள் சந்திக்கும் இடங்களில் எரியாமல் காட்சிபொருளாக உள்ள ைஹமாஸ் விளக்குகள் பயன்பாட்டிற்கு வரவேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை