மேலும் செய்திகள்
பரமக்குடியில் இன்று போக்குவரத்து மாற்றம்
11-Sep-2024
திருப்புத்துார் : திருப்புத்துார் வழியாக செல்லும் திருச்சி-ராமேஸ்வரம் வழித்தடத்தில் புதிய பஸ்சை கொடியசைத்து அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். அதே பஸ்சில் மற்றொரு நிகழ்ச்சிக்கு அமைச்சர் பயணம் செய்தார்.திருப்புத்துாரிலிருந்து காலை 9:50 மணிக்கு புறப்பட்டு சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனுார், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம் மண்டபம் வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. திரும்பி வரும் போது இரவு 7:00 மணிக்கு திருப்புத்துார் வந்து பின்னர் புதுக்கோட்டை, கீரனுார் வழியாக திருச்சிக்கு செல்கிறது.திட்ட இயக்குநர் சிவராமன், திருப்புத்துார் ஒன்றிய குழு தலைவர் சண்முகவடிவேல், பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, கவுன்சிலர் சாந்தி சோமசுந்தரம், போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
11-Sep-2024