தி.மு.க., பிரமுகர் கொலை மேலும் இருவர் கைது
சிவகங்கை: சிவகங்கை அருகே தி.மு.க., விளையாட்டு அணி மாவட்டத் துணை அமைப்பாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதங்கள் கொடுத்த சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.சிவகங்கை அருகே சாமியார்பட்டியை சேர்ந்தவர் பிரவீன் குமார் 27. தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளர். ரியல் எஸ்டேட் மற்றும் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். ஏப்.27 மதியம் 3:00 மணிக்கு பிரவீன் குமார் அவரது தோட்டத்தில் இருந்த போது டூவீலரில் வந்த ஒரு கும்பல் பிரவீன் குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.இதில் தொடர்புடைய சாமியார்பட்டி கருப்பையா மகன் விக்கி என்ற கருணாகரன் 20, சிவகங்கை காளவாசல் செல்வராஜ் மகன் பிரபாகரன் 19, திருப்புத்துார் நரசிங்கபுரம் சூரியமூர்த்தி மகன் குரு 21 ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்த நிலையில் நேற்று இந்த கொலைக்கு வாள் உள்ளிட்ட ஆயுதம் கொடுத்த 14 வயது சிறுவன், செய்களத்துார் முகேஷ் 21 ஆகிய இருவரையும் நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.