உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேகமாக மோதிய அரசு பஸ் சீட் பெல்ட்டால் தப்பிய இருவர்

வேகமாக மோதிய அரசு பஸ் சீட் பெல்ட்டால் தப்பிய இருவர்

திருப்புவனம் : திருப்புவனம் அருகே சக்குடி விலக்கில் வேகமாக வந்த அரசு பஸ், காரின் மீது மோதியதில் இருவர் உயிர் தப்பினர். ராஜபாளையத்தைச் சேர்ந்த விஜய்ஆனந்த் 49, என்பவர் காரில் காரைக்குடி சென்று விட்டு சிவகங்கை, சக்குடி விலக்கு வழியாக நான்கு வழிச்சாலையில் திரும்பியுள்ளார். இவரும் உறவினரும் காரின் முன்பகுதியில் சீட் பெல்ட் அணிந்து வந்துள்ளனர். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு ஒன் டூ ஒன் பஸ் காரின் பின்பகுதியில் மோதி 50 மீட்டர் துாரம் காரை தள்ளிச்சென்றதில் சென்டர் மீடியனில் உள்ள எச்சரிக்கை விளக்குகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி எதிர் திசையில் சென்று விழுந்தது.இந்த விபத்தில் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காரில் வந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. பஸ்சில் பயணம் செய்தவர்களுக்கும் காயம் இல்லை. விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர். அரசு பஸ்சை பழநியைச் சேர்ந்த தற்காலிக ஊழியர் ரமேஷ்கண்ணன் 40, இயக்கியுள்ளார். போக்குவரத்து கழக அதிகாரிகள் இனியாவது தொலை துார பஸ்களை அனுபவம் வாய்ந்த டிரைவர்களை கொண்டு இயக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !