| ADDED : நவ 27, 2025 06:56 AM
சிவகங்கை: வேலை உறுதி திட்ட நாட்களை 200 ஆக அதிகரித்து, தினக்கூலியாக ரூ.600 வழங்க கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சிவகங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட பூர்வமாக்க வேண்டும். வேலை உறுதி திட்ட பணி நாளை 200 ஆக அதிகரித்து, தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும் உட்பட 9 வித கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனைவாசலில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமராஜ் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சேதுராமன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் ராஜா, பொன்னுச்சாமி முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டி ஆகியோர் பேசினர். விவசாய சங்க மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், சந்திரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.