உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திறக்கப்படாத கழிப்பறை

திறக்கப்படாத கழிப்பறை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கட்டி முடித்து 8 மாதங்கள் ஆகியும் கழிப்பறை திறக்கப்படாமல் நிதி வீணாகி வருகிறது.இவ்வொன்றியத்தில் பிரான்மலை ஊராட்சி மதகுபட்டியில் மயானம் எதிரில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கழிப்பறை கட்டப்பட்டது.ரூ.3.50 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இக்கழிப்பறை 8 மாதங்களைக் கடந்தும் இன்னும் திறக்கப்படவில்லை. இக்கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படாததால் பயன்படுத்த முடியவில்லை.இதனால் ஊராட்சி நிதி வீணாகி வருகிறது. விரைவில் கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை