திருப்புத்துாரில் வடமாடு மஞ்சுவிரட்டு
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் புதுக்காட்டாம்பூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க., சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.பல மாவட்டங்களைச் சேர்ந்த 16க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்கு 20 நிமிடங்கள் விளையாட அனுமதிக்கப்பட்டது.ஒரு சுற்றுக்கு 9 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகளை பிடிக்க முயன்றதில் சிலர் காயம் அடைந்தனர்.வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. திருக்கோஷ்டியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.