ஆபத்தான கட்டத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம்
சிங்கம்புணரி: பிரான்மலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பழுதடைந்து நிலையில் உள்ளது. கூரை பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளதால், உயிர் பயத்துடனேயே அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டித் தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.