மீடியனில் மோதி கவிழ்ந்த காய்கறி லாரி
மானாமதுரை : மதுரையில் உள்ள மொத்த காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டில் இருந்து திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம்,கமுதி உள்ளிட்ட நகரங்களுக்கு தினசரி ஏராளமான லாரிகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.நேற்று அதிகாலை பரமக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு மினி லாரி காய்கறிகளை ஏற்றி வந்தது. மதுரை டிரைவர் அருண்குமார் ஓட்டி வந்தார். ராஜகம்பீரம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள மீடியனில் எதிர்பாராத விதமாக மோதி தலைக்குப்புற கவிழ்ந்ததில் டிரைவர் அருண்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. லாரியில் இருந்த காய்கறிகள் ரோட்டில் சிதறியது. மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.