உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விபத்து சாலையாக மாறிய வேங்கைப்பட்டி சாலை

விபத்து சாலையாக மாறிய வேங்கைப்பட்டி சாலை

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் இருந்து வேங்கைப்பட்டி செல்லும் சாலை அகலம் குறைவால் விபத்து சாலையாக மாறி வருகிறது.இவ்வொன்றியத்தில் வாகன போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளில் ஒன்றாக வேங்கைப்பட்டி செல்லும் பிரான்மலை சாலை உள்ளது. இச்சாலை புதிதாக அமைக்கப்பட்ட போது 10 அடி அகலத்திற்கு மட்டுமே போடப்பட்டது. தற்போது பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகம் சென்று வரும் நிலையிலும் சாலை அகலப்படுத்தப்படவில்லை.பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பிரான்மலை கோயிலுக்கு செல்ல இச்சாலையை பயன்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் குறுகிய சாலையால் கண்மாய், வயல்களுக்குள் வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. இச்சாலையை அகலப்படுத்த பல முறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை