உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் மண்புழு உரக்கிடங்குகள் முடங்கியது; கிராமங்களில் செயல்படாத தயாரிப்பு மையம்

தேவகோட்டையில் மண்புழு உரக்கிடங்குகள் முடங்கியது; கிராமங்களில் செயல்படாத தயாரிப்பு மையம்

தேவகோட்டை ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளும் கண்ணங்குடி ஒன்றியத்தில் 17 ஊராட்சிகளும் என 59 ஊராட்சிகளில் நுாற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. ஐயாயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மற்ற ரசாயன உரங்களுடன் விவசாயத்திற்கேற்ற இயற்கை உரங்களும் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இதில் ஒரு அங்கமாக விவசாயிகளின் நண்பன் என கூறப்படும் மண்புழு மண்ணை வளப்படுத்தும் என்பதால் இதனைத் தொடர்ந்து அரசு மண்புழு உரம் தயாரிப்பதற்காக ஒவ்வொரு ஊராட்சியிலும் பல கிராமங்கள் தோறும் மண்புழு உர மையத்தை அமைத்தது. சிமென்ட்டால் பெரிய தொட்டி , தகர கொட்டகையுடன் கூடிய அறை ரூ. 50 ஆயிரம் முதல் லட்ச ரூபாய் வரை செலவழித்து அமைத்தனர். சிலருக்கு பயிற்சியும் அளித்தனர். சில தினங்கள் மட்டும் செயல்பட்டது. மண்புழு உர தயாரிப்பில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. சில தினங்களிலேயே இரண்டு ஒன்றியங்களில் உள்ள மண் புழு மையங்கள் மூடு விழா கண்டது. மண்புழு விவசாயத்திற்கு பயன் உள்ளது என்றாலும் கூட விவசாய அதிகாரி கள், ஒன்றிய அதிகாரிகள் ஒருங்கிணைப்புடன் தீவிர கவனம் செலுத்தி அக்கறை காட்டாததால் அரசின் திட்டம் பலனில்லாமல் போய்விட்டது. ஊராட்சி தலைவர்கள், பணியாளர்களும் ஊக்கப்படுத்தவில்லை. தற்போது அனைத்து மையங்களிலுள்ள தொட்டிகளைச் சுற்றி முட்செடிகள் வளர்ந்து புதராக மண்டி கிடக்கிறது. இது பற்றி ஒன்றிய அலுவலரிடம் விசாரித்ததில், மண் புழு உர மையம் ஒரு இடத்திலும் செயல்படவில்லை. ஊராட்சிகள் கவனிக்க வேண்டும். அவர்களும் கவனிக்கவில்லை. கட்டடம் கட்டியதோடு சரி. எந்த பணியும் நடக்கவில்லை. நல்ல திட்டம் செயல்படுத்தினால் நல்லது தான் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ