கிராம உதவியாளர் நேர்முகத் தேர்வு
திருப்புத்துார்: திருப்புத்துார் தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு நடந்தது. திருப்புத்துார் தாலுகாவில் பெரிச்சிகோவில்,துவார், தென்மாப்பட்டு, வாணியங்காடு, கீழபட்டமங்கலம், கள்ளிப்பட்டு, செவரக்கோட்டை, கருப்பூர், ரணசிங்கபுரம் ஆகிய கிராமங்களுக்கு கிராம உதவியாளர் பணிக்கு 197 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு நவ.6ல் எழுத்துத் தேர்வு நடந்தது. நேற்று நேர்முகத் தேர்வு நடந்தது. விண்ணப்பதாரர்களில் 193 பேர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர். நேர்முகத் தேர்வை தாசில்தார் மாணிக்கவாசகம், தனிதாசில்தார் கந்தசாமி, சப் கலெக்டர் (நேர்முக உதவியாளர்) செல்வராணி ஆகியோர் நடத்தினர்.