கச்சாத்தநல்லுாரில் உறை கிணறு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
இளையான்குடி: இளையான்குடி அருகே கச்சாத்தநல்லுாரில் உறை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு தடையில்லாத குடிநீர் வினியோகம் செய்வதற்காக மத்திய அரசின் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.28 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் பரமக்குடி அருகே உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் இருந்து உறை கிணறுகள் மூலம் குடிநீர் உறிஞ்சப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேமிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து குழாய் வழியாக இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி களுக்கு குடிநீர் வினி யோகம் செய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கச்சாத்த நல்லுார் வைகை ஆற்று பகுதியில் உள்ள தடுப்பணை அருகே உறை கிணறு அமைக்க கச்சாத்த நல்லுார் கிராம மக்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் குடிநீர் திட்ட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று கச்சாத்தநல்லூர் கிராம மக்கள் இப்பகுதி யில் உறை கிணறு அமைத்தால் எங்கள் கிராமத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதால் இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். வைகையில் கிணறுகள் அமைக்க உள்ள இடத்திலும் முற்றுகை போராட்டம் நடத்தினர். இளையான்குடி இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்,பேரூராட்சி செயல் அலுவலர் அன்னலட்சுமி, துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு வாரம் கழித்து சிவகங்கை கோட்டாட்சியர் அலு வலகத்தில் சமாதான கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.