உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விஸ்வகர்ம கைவினைஞர் சங்க கிளை துவக்க விழா 

விஸ்வகர்ம கைவினைஞர் சங்க கிளை துவக்க விழா 

சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க கிளை துவக்க விழா நடந்தது. விழாவிற்கு சிவகங்கை மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் தெய்வசிகாமணி, துணை செயலாளர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி வரவேற்றார். மாநில தலைவர் சண்முகநாதன் சங்க கொடியேற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன், மாவட்ட அவை தலைவர் முருகேசன், கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்மதி நாகராஜன், துணை செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், துணை தலைவர் கருப்பையா, அமைப்பு செயலாளர் ராமசாமி, இளைஞரணி செயலாளர் சுப்பிரமணியன், தகவல் தொடர்பு செயலர் வைரவேல் உள்ளிட்டோர்பங்கேற்றனர். ராமசந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை