உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடி கண்மாய்களுக்கு திருப்பி விடப்பட்ட தண்ணீர்

இளையான்குடி கண்மாய்களுக்கு திருப்பி விடப்பட்ட தண்ணீர்

இளையான்குடி: இளையான்குடியில் சுப்பன் கால்வாய் திட்டத்தின் மூலம் பயன்பெறும் கண்மாய்களுக்கு வைகை தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருப்பி விட்டனர்.மானாமதுரை, இளையான்குடி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வைகை ஆற்றின் முக்கிய துணை ஆறான உப்பாற்றில் வரும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் சுப்பன் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது.ஆனால் இத்திட்டம் நிறைவேறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மானாமதுரை மற்றும் இளையான்குடி தாலுகாவில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் கண்மாய்கள் வறண்டு கிடக்கும் நிலையில் உப்பாற்றில் வெள்ளம் ஏற்பட்டு வினாடிக்கு 2ஆயிரம் கன அடி வீதம் வைகை ஆற்றில் கலந்து வரும் நிலையில் பார்த்திபனூர் மதகணையிலிருந்து இடது பிரதான கால்வாய் மூலம் இளையான்குடி பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி, வைகை,குண்டாறு பாசன சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானதன் எதிரொலியாகவும், எம்.எல்.ஏ., தமிழரசி மற்றும் இளையான்குடி பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் இளையான்குடிக்கு சிற்பம் கால்வாய் திட்டத்தின் மூலம் பயன்பெறும் கண்மாய்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீரை திறந்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ