உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தண்ணீர் விநியோகம்: அதிகாரிகள் உறுதி

தண்ணீர் விநியோகம்: அதிகாரிகள் உறுதி

இளையான்குடி: இளையான்குடி அருகே உதயனுார் பஞ்சாயத்துக்குஉட்பட்ட சொக்கப்படப்பு மாதா நகரில் 30க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருப்புக்குஅருகில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அந்த குடும்பங்களுக்கு தண்ணீர்தடையின்றி வழங்கப்படுவதாகவும், மாதாநகரில் வசிப்பவர்களுக்கு தண்ணீர் கிடைக்காததால் சிரமப்பட்டு வருவதாக கூறி நேற்று இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,க்கள் விஜயகுமார், முத்துக்குமரனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.இதையடுத்து உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை