மேலும் செய்திகள்
கடலுார் கோர்ட்டில் மரக்கன்று நடும் விழா
29-Jul-2025
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சி நடந்தது. மாவட்ட நீதிபதி அறிவொளி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில் வருவாய்த்துறை மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்ட துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.1.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட நீதிபதி வழங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி பார்த்தசாரதி,மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன், குடும்ப நல நீதிபதி பசும்பொன் சண்முகையா,தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில் முரளி, சார்பு நீதிபதி பாண்டி, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா, ஊழல் தடுப்பு நீதிபதி அனிதா கிறிஸ்டி, நீதிபதிகள் செல்வி, தீப தர்ஷினி, செல்வம், தங்கமணி, வழக்கறிஞர்கள் ஜானகிராமன், சித்திரைச்சாமி கலந்து கொண்டனர்.
29-Jul-2025