உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பராமரிப்பு எப்போது

 பராமரிப்பு எப்போது

சிவகங்கை அருகே சாலுார் ஊராட்சிக்குட்பட்ட 7 கிராமங்கள் இயற்கையாக காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகள் நிறைந்த பகுதி. இங்கு நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு, காய்கறிகள், கீரை வகைகள், வாழை என அனைத்து வகை விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக சாலுாரில் சாக்கவயல் கண்மாய் உள்ளது. இதன் உட்பரப்பு 120 ஏக்கர். கண்மாய் கிழக்கு பகுதியில் 3 இடங்களில் மடைகள் உள்ளன. இந்த கண்மாய்க்கு பெரியாறு பாசன நீர் திறக்கப்படும் போது, மலம்பட்டி அருகே கீழப்பூங்குடி விலக்கில் உள்ள ஷட்டர் மூலம் வரத்து கால்வாய் வழியாக பாசன நீர், இக்கண்மாய்க்கு கொண்டு வரப்படுகிறது. இந்த வரத்து கால்வாய் காலப்போக்கில் துார்ந்து மண் மேவி காணப்படுவதால் கண்மாய்க்கு முழுமையாக பெரியாறு அணை நீர் வந்து சேரவில்லை. இது போன்ற நிலை தொடர்ந்து பல ஆண்டாக நீடித்து வருவதால், சாக்கவயல் கண்மாயில் முழுமையான நீர் தேக்க முடியாமல் போய் விட்டது. கண்மாயின் உட்பரப்பில் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. அதே போன்று கண்மாயின் கிழக்கு பகுதியில் உள்ள 3 மடைகளும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு சிதிலமடைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே விவசாயிகள் வைத்துள்ள கிணற்று பாசனத்தை நம்பிதான் இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த கண்மாயால், விவசாயிகளுக்கு எந்தவித பயனும் இல்லை. எனவே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாயின் உட்பகுதியில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி, கண்மாயை ஆழப்படுத்த வேண்டும். 3 மடைகளையும் சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 30 ஆண்டாக நிரம்பாத கண்மாய் சாலுார் விவசாயி ஆர்.சின்னதம்பி கூறியதாவது: இக்கண்மாய்க்கு நீர் ஆதாரமே பெரியாறு அணை தண்ணீர் தான். ஆனால், கீழப்பூங்குடி விலக்கில் இருந்து சாலுார் வரை 4 கி.மீ., துாரத்திற்கு சிறிய அளவிலான வரத்து கால்வாய் உள்ளது. அந்த வரத்து கால்வாயை அகலப்படுத்துவதோடு சிமென்ட் கால்வாயாக கட்ட வேண்டும். அப்போது தான் கண்மாய்க்கு பெரியாறு அணை தண்ணீர் வந்து சேர்ந்து, இப்பகுதியில் நம்பிக்கையுடன் விவசாயம் செய்ய முடியும். இந்த கண்மாய் 30 ஆண்டிற்கு முன் நிரம்பியது. அதற்கு பின் ஒரு முறை கூட நிரம்பவே இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ