உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கட்டுப்படுத்தப்படுமா

கட்டுப்படுத்தப்படுமா

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகள் 19, ஆரம்ப சுகாதார நிலையங்கள் 49 செயல்பட்டு வருகின்றன. இது தவிர அரசு அனுமதியுடனும் தனியார் கிளினிக், மருத்துவமனைகள் செயல்படுகிறது. இங்கு வரும் நோயாளிகளுக்கு டாக்டர்கள் முறைப்படி சிகிச்சை அளிக்கின்றனர்.ஆனால் மாவட்டத்தில் சில பகுதிகளில் டாக்டருக்கு படிக்காமலேயே சிலர் மெடிக்கல் நடத்துவதோடு சிகிச்சை அளிப்பதாக அவ்வப்போது புகார்கள் உள்ளது. கீழப்பூங்குடியில் டாக்டருக்கு படிக்காமல் பெண் ஒருவர் வைத்தியம் பார்ப்பதாகவும், அதேபோல் மதகுபட்டியை சுற்றியுள்ள ஓலக்குடி, அரளிக்கோட்டை, கட்டாணி பட்டி, ஏரியூர் பகுதிகளில் சிலர் டாக்டருக்கு படிக்காமலேயே மருத்துவம் பார்த்து வருகின்றனர். இவர்களால் கொடுக்கப்படும் மாத்திரைகளை சாப்பிடுவதால் கிட்னி பிரச்னை, வேறு பல பிரச்னை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மருந்து கடை வைத்திருக்கும் ஒரு சிலர் டாக்டர் அனுமதி இல்லாமல் ஊசி போடுவது,டாக்டர் அனுமதி சீட்டு இல்லாமலேயே மருந்து மாத்திரை வழங்கி வருகின்றனர்.சில கிராமங்களில் போதைக்கு அடிமையான இளைஞர்கள் டாக்டர் சீட்டு இல்லாமலேயே தனியார் மெடிக்கலில் காப் சிரப்புகளை வாங்கி குடிப்பதும், வலி நிவாரண மாத்திரைகள், துாக்க மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு போதைக்கு அடிமையாகி வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மருந்து கடைகளில் டாக்டர் சீட்டு இல்லாமல் அதிகமாக விற்கப்படும் காப் சிரப், வலி நிவாரணி மாத்திரைகள், துாக்க மாத்திரை விற்கும் கடைகளை மருத்துவத்துறை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். அதேபோல் கிராமப்புறங்களில் டாக்டர்களுக்கு படிக்காமல் வைத்தியம் பார்த்து வருபவர்களை கண்காணித்து அவர்கள் மீது மருத்துவ துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.இணை இயக்குனர் தர்மர் கூறுகையில், திருப்புத்துார் பகுதிகளில் புகார் வந்தது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்ய உள்ளோம். கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ