உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அஜித் குமார் கொலை வழக்கில் சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

அஜித் குமார் கொலை வழக்கில் சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

சிவகங்கை; மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சிகளாக இருக்கும் அஜித்குமார் தம்பி நவீன்குமார், சக்தீஸ்வரன், அருண்குமார், பிரவீன்குமார் ஆகிய 4 பேர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி அளித்த மனு தொடர்பாக சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிபதி முன்னிலையில் நேற்று வழக்குரைஞருடன் ஆஜராகினர். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது சம்பந்தமான வழக்கில் சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி, எஸ்.பி., சிவபிரசாத், அரசு வழக்குரைஞர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு சார்பில் பாதுகாப்பு கேட்ட அனைவரும் நேற்று மாலை 4:00 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, நவீன்குமார், ஆட்டோ டிரைவர் அருண்குமார், சக ஊழியர் பிரவீன்குமார் அறநிலையத்துறை ஊழியர் சக்தீஸ்வரன் ஆகிய 4 பேர் வழக்குரைஞர் கார்த்திக்ராஜாவுடன் சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜராகினர். அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி