மேலும் செய்திகள்
நகை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி
17-Dec-2024
சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பில் 3 அடுக்குமாடிகளுடன் 608 வீடுகள் உள்ளன. இதில், 2வது மாடியில் எலக்ட்ரீசியன் ஞானம்பழம், இவரது மனைவி கமலா 37, 16 வயது மகன், 2 மகள்களுடன் வசிக்கிறார். இக்குடியிருப்பில் உள்ள பெண்கள் கமலாவை அடிக்கடி தொந்தரவு செய்வது, மதம் மாறக்கூறியும், அடிக்கடி மதப்பிரச்னையை கிளப்பி தொந்தரவு செய்வதாக போலீசில் புகார் செய்திருந்தார். போலீசார் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அக்குடியிருப்பில் உள்ள பெண்களால் துன்புறுத்தலுக்கு உள்ளானார். போலீசாரும் நடவடிக்கை எடுக்காததால், நேற்று காலை 11:45 மணிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் கமலா தன் இரு மகள்களுடன் வந்தார். கையில் வைத்திருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் உடனடியாக ஓடிவந்து பெண்ணை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் வைத்திருந்த தீப்பெட்டியும் எளிதில் தீ பிடிக்காததால் அதிர்ஷ்டவசமாக அப்பெண்ணுடன், இரு மகள்களும் தப்பினர்.
17-Dec-2024