உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மடப்புரத்தில் பக்தர்கள் வசதிக்காக கிரிப் அமைக்கும் பணி தொடக்கம்

மடப்புரத்தில் பக்தர்கள் வசதிக்காக கிரிப் அமைக்கும் பணி தொடக்கம்

திருப்புவனம்: மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் பிரகாரத்தில் பக்தர்களின் வசதிக்காக கிரிப் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மடப்புரம் காளியை வேண்டினால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பதால் பக்தர்கள் பலரும் நீராடிவிட்டு ஈர உடையுடன் அங்கப்பிரதட்சணம் செய்வது வழக்கம், இதுதவிர கோயிலில் துாய்மை பணிக்காகவும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வார்கள், கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களின் வசதிக்காக கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.தரை ஈரமாக உள்ள காலங்களில் பக்தர்கள் பலரும் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதனை தவிர்க்க ராஜகோபுர வாசல் அருகே கிரானைட் கற்களில் கிரிப் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் பக்தர்கள் ஈர காலுடன் வரும் போது தடுமாறாமல் பிரகாரத்தை வலம் வரலாம், கோயில் வளாகத்தில் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் கிரில் கம்பிகளில் பூட்டுபோட்டு பூட்டி விட்டு சாவிகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.கோயிலில் போடப்பட்டுள்ள பூட்டுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ள நிலையில் இனி பக்தர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கோயில் நிர்வாகம் பக்தர்களை வலியுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை