உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் தடைபட்ட தார் ரோடு பணி துவக்கம்

மானாமதுரையில் தடைபட்ட தார் ரோடு பணி துவக்கம்

மானாமதுரை; மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடைபட்ட தார் ரோடு போடும் பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு பகுதிகளிலும் உள்ள தெருக்கள் மற்றும் முக்கிய ரோடுகளில் புதிய குடிநீர் திட்ட பணிக்காக ரோடுகள் பெயர்ந்து எடுக்கப்பட்டு புதிதாக குழாய்கள் அமைக்கப்பட்டு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு புதிதாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக தோண்டப்பட்ட தார் ரோடுகளை போடுவதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிகள் துவங்கப்பட்ட போது மதுரை ஐகோர்ட் கிளையில் தடையாணை பெற்றதன் காரணமாக தார் ரோடு போடும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ரோடுகளும் குண்டு குழியுமாக இருந்ததினாலும், மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்ததினாலும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தார் ரோடுகள் போடுவதற்கு கோர்ட்டில் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக ராம்நகர், அண்ணாமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் தார் ரோடு போடும் பணிகள் தொடங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை