ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
மானாமதுரை:மானாமதுரை காந்திஜி நகரை சேர்ந்தவர் கருப்பையா 56, பட்டறை தொழிலாளியான இவர் மானாமதுரை வைகை ஆறு ரயில்வே மேம்பாலம் அருகே தாம்பரத்திலிருந்து ராமேஸ்வரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.மானாமதுரை ரயில்வே போலீசார் தற்கொலையா, விபத்தா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.