உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறுமிக்கு தொல்லை தொழிலாளிக்கு சிறை

சிறுமிக்கு தொல்லை தொழிலாளிக்கு சிறை

சிவகங்கை,:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் அசோக்குமார் 35. கட்டட தொழிலாளி. இவர் வீட்டின் அருகே வசித்து வரும் 16 வயது சிறுமியை 2020 பிப்.20ல் பாலியல் தொந்தரவு செய்தார். தேவகோட்டை மகளிர் போலீசார் இவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.இதில் அசோக்குமாருக்கு 3 ஆண்டு சிறைதண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்த நீதிபதி கோகுல் முருகன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. ஒரு லட்சம் வழங்கவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !