கல்லுாரியில் யோகா போட்டி
மானாமதுரை: மதுரையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் மானாமதுரை பாபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும்நர்சரி பள்ளி மாணவர்கள்கலந்து கொண்டனர். இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை இப்பள்ளி மாணவர்கள் பெற்றனர். இவர்களையும் பயிற்சி அளித்த மாஸ்டரையும் நிறுவனர் ராஜேஸ்வரி, தாளாளர் கபிலன்,நிர்வாகி மீனாட்சி, முதல்வர் சாரதா பாராட்டி பரிசு வழங்கினர்.