உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிணற்றில் பெண் பிணம் வாலிபர் கைது

கிணற்றில் பெண் பிணம் வாலிபர் கைது

தேவகோட்டை : தேவகோட்டை அருகேயுள்ள மணக்குடியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு.கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். சில ஆண்டுகளுக்கு முன் சாமிக்கண்ணுவும் இறந்து விட்டார் இவர்களது 19 வயது மகள் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். வறுமை காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியாமல் நிறுத்தி விட்டார். ஏப்.14ம் தேதி அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்தவர் சர்ச் அருகே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார்.பிரேத பரிசோதனையில் அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. திருமணமாகாதநிலையில் கர்ப்பமாக இருந்ததால் பெண்ணின்மரணம் குறித்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அந்த பெண்ணின் அலைபேசி, மற்றும் நட்பு வட்டாரத்தில் விசாரணை நடத்தினர். மேலுாரைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை