உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊருணியில் மூழ்கி வாலிபர் பலி

ஊருணியில் மூழ்கி வாலிபர் பலி

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் மகிபாலன்பட்டி அருகே கோவிலாப்பட்டியைச் சேர்ந்தவர் லோகநாதன் மகன் அருண்பாண்டியன்30. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு ஜூன்24 ல் வீடு திரும்பினார். நேற்று முன்தினம் மாலை அங்குள்ள ஊருணிக்கு குளிக்க சென்றனர். உடன் சகோதரியின் குழந்தைகளை அழைத்துச் சென்றார். குளிக்கும் முன் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்துள்ளார்.பிறகு குளிக்கச் சென்றவர் ஊருணி சகதிக்குள் சிக்கி மூச்சுத் திணறியுள்ளார். அதைப்பார்த்த குழந்தைகள் சப்தமிட அருகில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் அருண்பாண்டியனை மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதலுதவி அளித்துள்ளனர். திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது. கண்டவராயன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ