மேலும் செய்திகள்
கலைத் திருவிழா போட்டி; அம்மாபாளையம் பள்ளி அபாரம்
17-Nov-2024
தேவகோட்டை : தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் நேரு யுவகேந்திரா, கல்லுாரி முதுகலை தமிழ்த்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து இளையோர் திருவிழாவை நடத்தியது.மாவட்ட அளவில் கல்லுாரி மாணவ மாணவிகளுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு, எழுத்தாளர், பேச்சு , கட்டுரை, தனிநபர் நடனம், குழு நடனம், புகைப்பட போட்டி உட்பட 11 வகையான பல்வேறு திறன் போட்டிகள் நடைபெற்றன. மாநில கல்லூரி செயலாளர் செபாஸ்டியன் தொடங்கி வைத்தார்.கலைத்திறன் வென்றவர்கள்: இளம் எழுத்தாளர் பிரிவில் சேவுகன் அண்ணாமலை கல்லுாரி செந்தில்குமார் முதலிடம், அன்பு பாராமெடிக்கல் நிவேதிதா இரண்டாமிடம் ஆனந்தா கல்லூரி கன்னிகா மூன்றாமிடம், பேச்சு போட்டி: சேவுகன் அண்ணாமலை கல்லுாரி ராஜபாரதி முதலிடம், அழகப்பா பல்கலை நவீன் இரண்டாமிடம், அழகப்பா கலை கல்லூரி மாதரசி மூன்றாமிடம்போல்க் நடனம் (குழு) போட்டியில் ஆனந்தா கல்லூரி முதலிடம், அழகப்பா கலை கல்லூரி இரண்டாமிடம், அரசு பெண்கள் கல்லூரி மூன்றாமிடம் நடனம் (தனிநபர்) போட்டியில் ஆனந்தா கல்லூரி சரவணப்பிரியா முதலிடம், சஷ்மிதா இரண்டாமிடம், அழகப்பா பல்கலை ஸ்ரீநிதி மூன்றாமிடம், போட்டோகிராபி போட்டியில் அழகப்பா பாலிடெக்னிக் சுந்தர கிருஷ்ணன் முதலிடம், ஆனந்தா கல்லுாரி நிஷாந்த் இரண்டாமிடம், ஆரோக்கிய யோபு மூன்றாமிடம், அறிவியல் கண்காட்சி சேவுகன் அண்ணாமலை கல்லூரி சாகூல்மீளா முதலிடம், மைக்கேல் பாலிடெக்னிக் வீரமணி இரண்டாமிடம், பாலாதாசன் மூன்றாமிடம், குழு போட்டியில் சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதலிடம், மைக்கேல் பாலிடெக்னிக் இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. எம் எல்.ஏ. மாங்குடி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் ஜான் வசந்த் குமார் வரவேற்றார்.மத்திய இளைஞர் நலம், விளையாட்டு துறை மாநில இயக்குநர் செந்தில்குமார், அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில் ராஜன் பரிசு சான்றிதழ் வழங்கினர். ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீண்குமார், தமிழ்த்துறை தலைவர் தர்மராஜ் ஒருங்கிணைத்தனர்.
17-Nov-2024