மேலும் செய்திகள்
மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்
20-Sep-2024
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருமுக்காணிப்பட்டி கிராமத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் உறவினர் பெண்ணை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.திருப்புத்துார் அருகே திருமுக்காணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ரமேஷ் 33. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். 2012 ஆம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்தார். அப்போது இவரது உறவினர் பெண்ணான சேது ராஜ் மனைவி லட்சுமியிடம் 36, தான் கொடுத்து வைத்திருந்த பணத்தை கேட்டார். அதற்கு லட்சுமி தர மறுத்துள்ளார்.இருவருக்கும் இடையே 2012 அக்.29ல் தகராறு ஏற்பட்டது. இதில் லட்சுமியை தாக்கியதோடு அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் காயம் அடைந்த லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கீழசெவல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து ரமேஷை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன் குற்றவாளி ரமேஷுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
20-Sep-2024