உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / ஊருக்குள் புகுந்த யானை

ஊருக்குள் புகுந்த யானை

தென்காசி: தென்காசி பண்பொழி அருகே யானை ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி, கரிசல் குடியிருப்பு கிராமத்தில் ஒரு ஆண் யானை தனியே சுற்றித்திரிகிறது. விளைநிலங்களில் சுற்றுவதால் அங்கு செல்ல முடியாமல் மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானை விரட்டியதில் கீழே விழுந்து ஒருவர் காயமடைந்தார்.வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். மக்கள் வீட்டுக்குள் இருக்குமாறு ஜீப்பில் ஸ்பீக்கர் வைத்து எச்சரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை